Thursday, June 30, 2022

பாடசாலைக்குச் சென்ற இனியாவை காணாமல் துடிக்கும் பாக்யா- கோபியை வீட்டை விட்டு துரத்திய ராதிகா

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிய லட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி மற்றும் ராதிகா இடையே வாக்குவாதம் முற்றுகிறது. கோபி யாரோ ஏதோ சொன்னாங்கன்னு என்னுடைய குடும்பத்தை உனக்கு காட்ட முடியாது என கூறுகிறார். எனக்கு உங்க குடும்பத்தை பார்த்தே ஆகணும் என ராதிகா உறுதியாக இருக்க கோபியும் முடியாது என உறுதியாக கூற அப்படினா வெளியே போங்க கோபி என கூறுகிறார்.உன்னையே உலகம் என்று சுத்தி சுத்தி வந்தேனே எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என கோபி சொல்கிறார். கண்டிப்பா போயிடுவேன், திரும்ப வரவே மாட்டேன் என கோபி சொல்ல ராதிகா போங்க என கூறி விடுகிறார்.

அங்கிருந்து வெளியே வந்தபோது வெளியிலிருந்து மீண்டும் ராதிகாவை பார்த்து அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்ய சட்டென கதவை சாத்தி விடுகிறார் ராதிகா. இதனால் கோபி மூர்த்தியின் மீது பயங்கர கோபத்தில் காரில் புலம்பிக் கொண்டே வருகிறார். உண்மை தெரியணுமாமே.. என் குடும்பத்தை பார்த்தா நீ என்ன விட்டு போய்டுவ, அதுக்காகவா இவ்வளவு மெனக்கெட்டு பண்ணிக்கிட்டு இருக்கேன் என கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் எல்லோரும் அமர்ந்து கொண்டே இருக்க அப்போது எழில் வந்து இன்னும் 10 நாளில் என்னுடைய படம் ரிலீசாக போகிறது என கூற எல்லோரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பிறகு ஈஸ்வரி அப்படியே எழிலுக்கு ஒரு பொண்ணு பார்க்க தொடங்கிட வேண்டியதுதான் என சொல்ல பாக்கியா இப்போது வேண்டாம் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் இப்பதானே 23 வயசாகுது என கூறுகிறார். ஈஸ்வரி அவனா ஒரு பொண்ணு பாத்து கூட்டிட்டு வரதுக்குள்ள நாமலே பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று கூறுகிறார். எழில் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என கூறுகிறார். இப்ப பொண்ணு பாக்க ஆரம்பிச்சா தான் இன்னும் ஒரு வருடத்தில் பார்த்து முடிக்க முடியும் என கூறுகிறார்.

அதன் பின்னர் மாலை நேரமானதும் பாக்கியா இனியா இன்னும் வரவில்லை என பதற்றத்தோடு வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி உட்காரு வர நேரம் தான் வந்துவிடுவார் என சொல்ல பாக்கியவால் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. வாசலில் பார்ப்பதாக சொல்லி அப்படியே நடந்து ரோட்டிற்கு சென்று விடுகிறார். இனியா எதிரில் வருவதைப் பார்த்ததும் தான் அவர் நிம்மதி அடைகிறார்.

பின்பு கோபி தன்னுடைய நண்பர் சதீஷை பாரில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். ராதிகா தன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னது பற்றி சொல்லி வருத்தப்படுகிறார். ராதிகா எனக்கு வேண்டும் பாக்கியா ஏதோ பொம்பளைங்கள கூட்டு சேர்த்துக்கொண்டு சமையல் செஞ்சு பிழைச்சிப்பா என கூறுகிறார். என் அப்பா அம்மாவுக்கு ஒரு நல்ல பையனா இருந்திருக்கேன். என் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருந்து கடமையை செய்து இருக்கிறேன் என கூறுகிறார்.

ராதிகா கூட இருக்கிற இந்த கொஞ்ச நாளா தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு ராதிகா கண்டிப்பா வேணும்‌. அதற்காக நான் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கிறேன் என கண்கலங்கி கஷ்டப்படுகிறார். இந்தப் பக்கம் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் ராதிகா அப்செட்டில் அமர்ந்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. ‌‌


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்