• Apr 20 2024

டப்பிங் கட்டிடத்திற்கு சீல் வைப்பு.. என் மீதுள்ள பொறாமையால் இப்படி செய்கின்றார்கள்.. பொங்கி எழுந்த ராதாரவி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 500 இற்கு அதிகமான படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து சினிமாவில் தன்னுடைய சாதனையை நிலை நாட்டியவர் ராதா ரவி. அதுமட்டுமல்லாது சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவராகவும் இவர் இருந்து வருகின்றார். 


இந்நிலையில் சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரத்தில் உள்ள சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் 'சீல்' வைத்துள்ளனர். அதாவது இந்த கட்டிடத்தை கட்ட மாநகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச் சாட்டின் பேரில் இந்த சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


இதுகுறித்து தற்போது சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவரான ராதாரவி கூறும்போது "டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிட விதிமீறல் புகார் எழுந்த நேரத்தில் நான் பொறுப்பில் இல்லை. அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் இப்போது இல்லை. கட்டிடத்துக்கு எனது பெயரை வைக்க முடிவு செய்தபோது வேண்டாம் என்று நான் மறுத்தேன்" எனக் கூறியுள்ளார். 

மேலும் "டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் கட்டியதை எதிர்த்து வழக்கு போட்டதும் வக்கீல் மூலம் கோர்ட்டில் முறையான விளக்கம் ஒன்றினை நாம் அளித்தோம். ஆனால் மாநகராட்சி சார்பில் ஒரு மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் வந்து இருக்கலாம். வராமலும் இருக்கலாம். படப்பிடிப்பு உள்ளிட்ட வேறு பணிகளில் நான் தீவிரமாக இருந்ததால் நோட்டீஸை என் கவனத்துக்கு யாருமே கொண்டு வரவில்லை. 


இருப்பினும் டப்பிங் அலுலகம் வேறு இடத்தில் தொடர்ந்து செயல்படும். சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை திறக்க கோரி நாம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம். டப்பிங் சங்கத்துக்கு என்னை தொடர்ந்து தலைவராக தேர்வு செய்து வருவதால் சிலருக்கு பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் இருக்கிறது. அதன் விளைவாகவே ஒரு சிலர் இப்படி கீழ்த்தரமாக நடக்கின்றனர்'' எனவும் கூறியுள்ளார் ராதாரவி.

Advertisement

Advertisement

Advertisement