ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் வெளியாகிய விசித்திரம் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் ஆர். கே. சுரேஷ். இவர் எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள விசித்தின் திரைப்படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தின் கதைக்களம் என்ன என்று பார்ப்போம்.
காவல் துறையில் கான்ஸ்டபிளாக இருந்து வி ஆர் எஸ் பெற்றர்வர் கதாநாயகன் மாயன் { ஆர்.கே. சுரேஷ் }. பல பெரிய அதிகாரிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத குற்றங்களை சர்வசாதாரணமாக கண்டிபிடித்துவிடும் அளவிற்கு திறமைகொண்ட ஆர்.கே.சுரேஷ், மதுவிற்கு அடிமையாகிவிடுகிறார்.

காதலியை விட்டு பிரிந்த துயரத்தில், மனைவியையும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் தவித்து வருகிறார். இப்படி போய்க்கொண்டிருக்க, ஆர்.கே.சுரேஷை விட்டு பிரிந்து சென்ற அவரது மனைவி தீடீரென ஒரு நாள் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். அனைவரும் இதை விபத்து என்று கூறி வர, ஆர்.கே.சுரேஷ் மட்டும் இது விபத்து அல்ல, இது திட்டமிட்ட கொலை என்று சந்தேகப்படுகிறார்.

இதன்பின், ஆர்.கே.சுரேஷ் தனது மனைவியை கொன்றது யார்? எதற்காக இப்படி செய்தார்கள்? என்று கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை எனலாம்.

மேலும் இப்படத்தில் ஆர். கே. சுரேஷ் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதாநாயகியாக நடித்த பூர்ணா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து முடித்துள்ளார். அத்துாடு இளவரசு, பகவதி, மாரிமுத்து, ஜார்ஜ் மது ஷாலினி ஆகியோரும் தமது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு இப்படம் மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் தான் விசித்திரம் திரைப்படம். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. அத்தோடு படத்தை பார்த்து ரசிக்கலாம் என ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:


RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்