• Dec 05 2022

நொடிப் பொழுதில் தப்பித்த குயின்ஷி... அப்போ இந்த வாரம் வெளியேறப் போவது இவங்களா.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Listen News!
Prema / 2 weeks ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

அதாவது இந்நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவது வழமை. அந்தவரிசையில் சாந்தி, அசல், ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறி விட்டார்கள். அதேபோல் ஜிபி முத்து தன்னுடைய விருப்பத்தின் பேரில் முதல் ஆளாக வெளியேறி விட்டார்.


இந்நிலையில் இந்த வாராம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். அதில் ரசிகர்கள் பலரும் கூறி வருவது குயின்ஷியைத் தான். ஆனால் தற்போது குயின்ஷி இல்லை எனக் கூறப்படுகின்றது. 

அதாவது இளவரசியாக தன்னை தேர்ந்தெடுக்க விடாமல் விக்ரமனை தனலட்சுமி தடுத்து விட்டார் என்கிற நியாயமான கோரிக்கையை எழுப்பி பேசிய நிலையில், குயின்ஸிக்கு கடகடவென பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் ஓட்டுப் போட்டு அந்த குஷி இடுப்பை இன்னும் கொஞ்சம் நாள் வைத்திருக்கலாம் என நினைத்து அவரை ஷேவ் ஆக்கி விட்டனராம்.

அதுமட்டுமல்லாது ராபர்ட் மாஸ்டர் பாகுபலியாக மாறி ரச்சிதாவிடம் வேறலெவல் ரொமான்ஸ் செய்து வரும் நிலையில் இதுவரையில் அவரும் சேஃப் ஜோனில் தான் உள்ளார். இவர்களை போல் அசீம் ரசிகர்களின் மனசை நல்லாவே புரிந்து வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 


ஏனெனில் வார இறுதியில் மன்னிப்பு கேட்பது, வாரத்தின் முதல் மூன்று நாட்கள் அமைதி காப்பது. கடைசி 4ஆவது மற்றும் 5ஆவது நாளில் சண்டைப் போட்டால், அதற்கு முன்னதாகவே கணிசமான ஓட்டுக்கள் குவிந்து தான் காப்பாற்றப்படுவோம் என பக்கா ஸ்கெட்ச் போட்டு மாஸாக விளையாடி வருகிறார்.

இவ்வாறாக அதிக ஓட்டுக்களை பெற்று அசீம் இந்த வாரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், அலட்டிக் கொள்ளாமல் அழகாக விளையாடி 2ஆவது இடத்தை பிடித்திருக்கிறார் ஜனனி. அவருடைய ஆட்டம் கொஞ்சம் சூடு பிடித்தால் இன்னமும் அசீமை தாண்டி அதிக ஓட்டுக்களை அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இந்த வாரம் கதிரவனின் கேம் ரொம்பவே நல்லா இருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அதாவது அசீம் தப்பா பேசிய நிலையில், அவரை எதிர்த்து கேள்வி கேட்டது மட்டுமின்றி ஷிவினை காப்பாற்ற அந்த தப்பை நான் தான் செஞ்சேன் எனக் கூறியது என பலரையும் ரவுண்டு கட்டி விளையாடி வரும் கதிரவன் 3ஆவதாக சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில் இந்த வாரமும் எப்படியாவது ராபர்ட் மாஸ்டரை காப்பாற்ற வேண்டும் என்றே அவருக்கு ராஜா வேஷம் கொடுக்கப்பட்டது போல இருக்கு என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். இவர்களை போலவே தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் இருவருமே கதிருக்கு அடுத்த இடத்தில் பக்கா சேவாக உள்ளனர்.


இருந்தே குயின்ஸியின் நிலை தான் படுமோசமாக இருந்தது. ஆனால், செந்தமிழில் பேசுவது, தனலட்சுமியிடம் நியாயத்திற்காக வாதாடியது என அமைதியாக இல்லமால், துணிச்சலுடன் பேசி வரும் க்யூட் குயின்ஸிக்கு தற்போது அதிகளவில் ஓட்டுப் போட்டு இந்த வாரம் நீ வெளியே போக மாட்டேம்மா என பிக்பாஸ் ரசிகர்கள் முடிவு கட்டி உள்ளனர்.

இதனால் கடைசி இடத்தில் ஆயிஷா மற்றும் நிவாஷினி தான் இந்த வாரம் ரொம்பவே மோசமான நிலையில் இருக்கின்றனராம். மேலும் சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினி இன்னமும் பிக்பாஸ் வீட்டுக்குள் எந்தவொரு பெரிய ஆர்வத்தையும் விளையாட்டில் காட்டவே இல்லை. 


அத்தோடு இளவரசி போட்டிக்கு நின்ற நிவாஷினி கடைசியாக சேவகி போட்டிக்கு கூட நிற்க தயங்கி பின் வாங்கியமை, இன்னமும் அசல் கோலாரை பிரிந்த ஏக்கத்தில் தனிமையில் வாடுகின்றமை என இருந்து வரும் நிலையில், இந்த வாரம் கட்டாயம் நிவா தான் எவிக்ட் ஆவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.