• Apr 23 2024

புஷ்பா படத்தின் வசூலை அசால்டா முந்திய முக்கிய திரைப்படம்...வேற லெவல் சாதனை

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

புஷ்பா திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படமாகும்.


மேலும் இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பகத் பாசில் வில்லனாகவும், ராஷ்மிகா மந்தண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.


மேலும் திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் முதல் பாகம், ஆந்திரப் பிரதேசத்தின இராயலசீமை பகுதியின் சேசாசலம் மலைப்பகுதியில் செஞ்சந்தன மரக்கடத்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.


படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் முறையே மிரோசுலாவ் குபா புரோசெக் மற்றும் கார்த்திகா சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர். 


இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு புஷ்பா 2 வெளியாகவுள்ளது. இப்படம் உலகளவில் சுமார் ரூ. 350 கோடி வரை வசூல் செய்ததது.


இந்நிலையில், அண்மையில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள காந்தாரா திரைப்படம் புஷ்பா படத்தின் வசூலை அசால்டாக முந்தியுள்ளது.


ஆம், ரூ. 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கும் புஷ்பா திரைப்படத்தை 43 நாட்களில் ரூ. 359 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முந்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement