• Jun 03 2023

டேய் "புருஷா" இன்னுமாடா நாங்க ட்ரெண்ட்...இதுக்கு இல்லையாடா ஒரு முடிவு- விவாகரத்து சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த மகாலட்சுமி

stella / 1 week ago

Advertisement

Listen News!

'அன்பே வா' சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், திருப்பதியில் மிகவும் எளிமையாக இவர்கள் திருணம் நடந்தது. இவர்களின் திருமண புகைப்படம் வெளியான போது கூட, பலர் இது படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா? என சந்தேக கேள்விகளை எழுப்பி இருந்தனர்.


திருமணம் ஆனதில் இருந்து, தனி ஜெட்டில் ஹனி மூன், குலதெய்வ கோயில் வழிபாடு, ஃபாரின் ட்ரிப் என படு குஷியாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வபோது மிகவும் ரொமான்டிக் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு, தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வந்தனர்.

அண்மையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் அதனால் தான் தனித்தனியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. அதன் படி அண்மையில் ரவீந்தர் இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் பிரியவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.

அதே போல தற்பொழுது மகாலட்சுமியும் இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு கூறியதாவது டேய் "புருஷா" இன்ஸ்டாகிராமில் உனது தனிப் படத்தைப் பதிவேற்ற வேண்டாம் என்று எத்தனை முறை கூறியிருக்கிறாய். மீண்டும் முழு சமூக ஊடகங்களும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறது.. மவனே இனிமேல் இந்தத் தவறை மீண்டும் செய்... எனக்கு பிடித்த சேமியா உப்மா 3 வேளை உணவாக எப்போதும் கிடைக்கும்! !


யூடியூப் கிசுகிசு குழுவுக்கு என் மைண்ட் வாய்ஸ் - இன்னும்டா நாங்க ட்ரெண்ட்...இதுக்கு இல்லையாடா ஒரு முடிவு...என நக்கலாகப் பதிவொன்றினைப் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement