• Apr 19 2024

கோமாளியில் இருந்து குக்காக ப்ரமோஷன்.. ஷிவாங்கி போட்ட பதிவு!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சிமூலம்தான் முதன்முதலில் ரசிகர்களை பொது வெளியில் சந்தித்தார் ஷிவாங்கி. மேலும் இந்த நிகழ்ச்சியின்மூலம் இவர் தன்னுடைய வசீகர குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஷிவாங்கிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.


இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சீசன்களில் இவர் அடித்த லூட்டிகள் ஏராளம். இரண்டாவது சீசனில் அஸ்வினை வைத்து செய்தார்.அத்தோடு அவருடன் இணைந்து காதல் கலாட்டாக்களில் ஈடுபட்ட ஷிவாங்கி, அடுத்த கோமாளி புகழுடன் இணைந்து அண்ணன் -தங்கை பாசத்தை காட்டினார். அடுத்தடுத்த இந்த காம்பினேஷன்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.


மூன்றாவது சீசனிலும் மணிமேகலை, புகழ், சுனிதா என சக கோமாளிகள் மற்றும் குக்குகள், நடுவர்கள் என அனைவரிடமும் சிறப்பாக இணைந்து செயல்பட்டார். இவரது இனிமையான குரலால் அடுத்தடுத்த பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேற்றினார்.அத்தோடு  சில சமயங்களில் இந்த நிகழ்ச்சியின் முக்கியமான கோமாளியாக தன்னுடைய குக்கிற்கு வெற்றியையும் தேடித்தந்தார்.

இந்நிலையில் வரும் ஜனவரி 28ம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் துவங்கவுள்ளதாக தற்போது புதிய ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. கல்யாண சமையல் சாதம் என நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இந்த ப்ரமோவில் கும்பகர்ணன்களாக மாறியுள்ளனர். அத்தோடு கோமாளிகளையும் ஆட்டுவிக்க காத்திருக்கின்றனர்.


இதனிடையே ஷிவாங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவினை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான வதந்திகள் அனைத்தும் உண்மை என்று அவர் கூறியுள்ளார். தான் குக்காக இந்த சீசனில் ப்ரமோட் ஆகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். த்ரில்லிங்கான இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கியமான கோமாளிகளில் ஒருவராக ஷிவாங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியே அவருக்கு டான், காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள், இசைக் கச்சேரிகள், பின்னணி பாடல்கள் என மிகவும் பிசியாக காணப்படுகிறார் ஷிவாங்கி

-

Advertisement

Advertisement

Advertisement