• May 29 2023

என் ரூமிற்கு வா சரக்கடிக்கலாம் என்று சொன்னேனா..? பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நடிகையின் மீது தயாரிப்பாளர் போலீசில் புகார்...!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை நடிகைகளுக்கு மட்டுமன்றி சின்னத்திரை நடிகைகளுக்கும் ஏராளமான அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சினைகள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களால் கொடுக்கப்பட்டு வருவதாக சமீபகாலமாக பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.


அந்தவகையில் பிரபல இந்தி சின்னத்திரை நடிகையான ஜெனிஃபர் மிஸ்ட்ரி பன்சிவால் (Jennifer Mistry Bansiwal) என்பவர் தான் நடித்து வந்த சின்னத்திரை தொடரை தயாரித்து வரும் தயாரிப்பாளர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்து இருந்தமை பரபரப்பை கிளப்பியது.


அதாவது தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தன்னை தனியாக ரூமுக்கு வா சரக்கடிக்கலாம் என அழைத்ததாகவும், அடிக்கடி ஆபாசமாக பேசியதாகவும், தவறாக தொட்டதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

அதுமட்டுமல்லாது கடந்த 4 மாதத்துக்கு முன்னதாகவே அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் தொடரில் இருந்து வெளியேற போகிறேன் என சொன்னதால் தனக்கு வர வேண்டிய 4 மாத சம்பளத்தை பிடித்து விடுவோம் என இணைத் தயாரிப்பாளர்கள் இருவர் மிரட்டியதாகவும் அந்தப் புகாரில் நடிகை ஜெனிஃபர் குறிப்பிட்டிருந்தார்.


இதனையடுத்து அந்த நடிகை சொல்வது அனைத்துமே பொய் எனக்கூறி தயாரிப்பாளர் அசித் குமார் மோடி மும்பை போலீசாருக்கு ஒரு புகாரினை அளித்துள்ளார். அதில் அவர் "நடிகை ஜெனிஃபர் சரியாக ஷூட்டிங் வருவது கிடையாது என்றும் அவர் நடத்தை சரியில்லை என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் தான் அவரை அந்த சீரியலில் இருந்து தூக்கினோம். வேலை போன விரக்தியில் இப்படி என் மீதும் என் ஷோ மீதும் அபாண்டமான பழி சுமத்தி வருகிறார். இதற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கும் பதிவு செய்துள்ளேன்" என குறிப்பிட்டிருக்கின்றார்.

இவர்களின் இந்த விவகாரம் ஆனது இந்தி சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement