• Dec 01 2023

எமோஷனல் ஆகி அழுத விஜே பிரியங்கா..! பலரையும் கண் கலங்க வைத்த ஏவி வீடியோ

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்கின்றது விஜய் டிவி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சியும் பிரபலமாக இருக்கின்றன. அவ்வகையில் அண்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி உள்ளது.

இந்த சீசனில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். 

இந்நிகழ்ச்சியின் தேவா ராகம் ரவுண்டின் ப்ரோமோவில் இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, நடுவராக இருக்கிறார்.இதில் போட்டியாளர் சந்திரன் குறித்த ஏவி வீடியோவை பகிரும்போது, அவர் தம் தாய் பற்றி உருக்கமாக பேசுகிறார்.

சிங்கிள் மதராக (கணவரை இழந்த தாய்) 12 வருடமாக வீட்டு வேலை செய்தெல்லாம் தங்களை தங்கள் தாய் வளர்த்தது குறித்து சந்திரன் உருக்கமாக பேசும்போது எமோஷனல் ஆன விஜே பிரியங்கா, “சிங்கிள் பெற்றோராக பிள்ளைகளை வளர்க்கும் அனைத்து சிங்கிள் பெற்றோருக்கும் லவ் யூ.! அம்மா ஐ லவ் யூ!” என எமோஷனலாக பேசி அழுதுவிட்டார். இந்த தருணம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement