• Apr 25 2024

மோசடி செய்து உலக அழகிப் பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா... திடுக்கிடும் தகவலைக் கூறிய மாடல் அழகி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகையாகிய பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில் உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடி இருக்கின்றார். இதற்கு இவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வந்து குவிந்தமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து தற்போது குற்றச்சாட்டு நிறைந்த ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக கூறி 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் பலவற்றை கூறியுள்ளார்.


அந்தவகையில் உலக அழகி போட்டியில் 'தில்லுமுல்லு' நடைபெற்றதால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற்று முடி சூட முடிந்ததாக லீலானி மெக்கோனி கூறினார்.

மேலும் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் உலக அழகிகளுக்கான போட்டியில், மோசடி நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த போட்டியில் யார் வெற்றியாளர் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று அதுதொடர்பாகவும் பரபரப்பு குற்றம் ஒன்றினை முன்வைத்து சாட்டியுள்ளார் முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி.


அதாவது முன்னாள் உலக அழகிகளுக்கான இந்த போட்டியில் மிஸ் டெக்சாஸ் பட்டம் வென்ற அழகி ஆர்'போனி கேப்ரியல் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் ஸ்பான்சர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தற்சார்பு நடவடிக்கை காரணமாகவே ஆர்'போனி கேப்ரியல் நியாயமற்ற முறையில் வெற்றியைப் பெற்றுள்ளார் என்று லீலானி மெக்கோனி கூறினார்.

அதுமட்டுமல்லாது பிரியங்கா சோப்ரா மீதும் முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி இந்த சம்பவத்தை ஒட்டி சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதாவது இதைப் போன்றே உலக அழகி போட்டியில், பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக இந்திய டிவி அமைப்புகள் சில எடுத்த நடுநிலை தவறிய சார்பு நடவடிக்கையால் தான் அவர் பட்டம் வென்றார் என்று பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். 


அத்தோடு "2000-ஆம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியை நடத்தும் ஸ்பான்சர் நிறுவனமாக இந்தியாவை சார்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இருந்ததால் தான் பிரியங்கா சோப்ராவால் அந்த வெற்றியை இலகுவாகப் பெற முடிந்தது. மேலும் உலக அழகி போட்டியில், பிகினி ஆடை சுற்றில் பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக போட்டியை நடத்தும் நடுவர்கள் விதிகளை மீறியுள்ளனர்" என்றும் லீலானி மெக்கோனி கூறினார்.

இறுதியில் உலக அழகி போட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா தான் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வெளிப்படையான விஷயமாக இருந்தது. இப்படித்தான் அந்த உலக அழகி போட்டியில் முறைகேடு நடந்தது என்று லீலானி மெக்கோனி கூறினார். இதுபோன்ற பல சம்பவங்களை அவர் எடுத்துக் கூறி குற்றச்சாட்டுக்களினை முன்வைத்து இருக்கின்றமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement