“நரப்பா ” திரைப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரியாமணி – அதிர்ச்சியில் தெலுங்கு ரசிகர்கள்

631

தமிழில் தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ‘நரப்பா ஓடிடியில் வெளியானது. வெங்கடேஷ் – பிரியாமணி முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக மனம் கவர்ந்த பிரியாமணி. தமிழில் தனுஷின் மனைவியாக வந்த மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்துள்ளார்.

நாரப்பா பட அனுபவம் குறித்து பிரியாமணி ‘அசுரன் படத்தை ஏற்கெனவே நான் பார்த்துட்டதால அதோட தெலுங்கு ரீமேக்லதான் பண்ணப்போறேன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். தெலுங்குல நிறைய கிளாமர் ரோல்களே பண்ணதால இந்த கேரக்டரும் சரி, கெட்டப்பும் சரி, என்னோட தெலுங்கு ரசிகர்களுக்கு ரொம்பவே புதுசு. ஆனா, தமிழ்ல அப்படி இல்ல. பருத்திவீரன் படத்திலேயே முத்தழகு கேரக்டர்ல கிராமத்துப் பொண்ணா நடிச்சிருந்தேன். கிளாமர் கேரக்டர்கள்லேயே பெரும்பாலும் என்னைப் பார்த்துவந்த தெலுங்கு ஆடியன்ஸுக்கு என்னோட இன்னொரு பக்கத்தையும் நாரப்பா மூலம் காட்ட முடிஞ்சிருக்கு என மனம் உருகி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.