• Apr 24 2024

“சூரரை போற்று”ஹிந்தி ரீமேக்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்-யார் நடிக்கிறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சூர்யா. சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் அதிக வரவேற்புக் கிடைத்து வருகின்றது. அத்தோடு இப்போது பாலா இயக்கத்தில் தனது 41 வது படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சூரரைப்போற்று . இந்தத் திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்ததோடு ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் ஹிந்தியில் சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்கி வருகிறார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் சூரரைப்போற்று ஹிந்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement