• Mar 28 2024

"பிரதீப் 'லவ் டுடே' படத்தின் மூலம் என்னை பழி வாங்கிட்டார்".. பகீர் தகவலைக் கூறிய பார்த்திபன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'லவ் டுடே' என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படமானது 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்திருந்தது.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகர் பார்த்திபன் தன்னை லவ் டுடே படத்தின் மூலமாக பிரதீப் ரங்கநாதன் பழி வாங்கியிருப்பதாக பகீர் தகவலைக் கூறி இருக்கின்றார். அதாவது கோமாளி படத்தின் போது தான் பஞ்சாயத்து பண்ணியதாகவும், அதனை மனதில் வைத்துக்கொண்டு தன்னை சீண்டும் வகையில் தான் லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் வைத்துள்ள டயலாக் அமைந்திருப்பதாக கூறி உள்ளார்.


அதாவது அப்படத்தில் ‘பக்காவா பேசிக்கிட்டு இருந்த நீ.. பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியே’னு ஒரு டயலாக் இடம்பெற்று இருந்தது. இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் லவ் டுடே படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றிருந்த பார்த்திபன், அந்த டயலாக் கேட்டு முதலில் சிரித்துவிட்டாராம். ஆனால் அதன் பின்னர் தானாம் நல்லா இருந்த நீ... என்னடா பைத்தியம் ஆகிட்டியே என்பதை சொல்வதற்காகவே அந்த டயலாக் வைக்கப்பட்டுள்ளது என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. 


மேலும் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவர், ஒரு கதை ஒன்றை தயார் செய்து வைத்திருந்தாராம். ஆனால் அந்தக் கதையும் கோமாளி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக கூறி ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாக்யராஜ் முன்னிலையில் இந்த கதை சர்ச்சை குறித்து பேசி தனது உதவி இயக்குநருக்காக ரூ.10 லட்சம் வாங்கி கொடுத்திருக்கிற பெருமை பார்த்திபனையே சாரும்.

இந்தப் பிரச்சினைகள் யாவும் கோமாளி பட ரிலீஸ் சமயத்தில் நடந்துள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் லவ் டுடேவில் அப்படி ஒரு டயலாக்கை பிரதீப் ரங்கநாதன் வைத்திருந்ததாக பார்த்திபன் அப்பேட்டியில் ஓப்பனாக தெரிவித்துள்ளார். 


அத்தோடு தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பிரதீப் அந்த டயலாக்கை லவ் டுடே படத்தில் வைத்திருந்தாலும், அவரை அந்த பேட்டியில் திட்டித் தீர்க்காமல் பார்த்திபன் பாராட்டி பேசி இருந்தமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement