• Dec 10 2022

கோடிகளில் புரளும் பிரதீப் ரங்கநாதன்..லவ் டுடே செய்த சாதனை

Listen News!
lathushan / 3 weeks ago
image
Listen News!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். மேலும் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார்.


மேலும் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும்  இப் படத்துக்கான தியேட்டர் காட்சிகளும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. 


அதுமட்டுமல்லாமல் லவ் டுடே இயக்குனராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் இப் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.


மேலும் இப் படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப் படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.


இந்நிலையில், இப்படம் வெளிவந்த இதுவரை உலகளவில் ரூ. 57 கோடிகளை வசூல் செய்துள்ளது.அதே போல் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 47 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.