• Apr 25 2024

பிரபுதேவாவின் பிரமாண்ட வீடு... அடேங்கப்பா அரண்மனை மாதிரி இருக்கே... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஒரு கலைஞராகத் திகழ்ந்து வருபவர் பிரபு தேவா. நடனத்தில் எந்தளவிற்கு சிறந்து விளங்குகின்றாரோ அந்த அளவிற்கு நடிப்பிலும் அசத்தி வருகின்றார்.


இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று 'பொய்கால் குதிரை'. வழக்கம் போல் இல்லாமல் இப்படத்தில் மாறுபட்ட நடிப்பை பிரபு தேவா வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரீச் ஆகவில்லை.


அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'மை டியர் பூதம்' என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் படு பிஸியாக இருந்து வருகின்றார்.


மேலும் தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்த வந்த பிரபு தேவா, சில வருடங்களுக்கு முன் மருத்துவர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது பிரபு தேவா வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அவரது வீடானது பார்ப்பதற்கு அரண்மனை போன்று காட்சி அளிக்கின்றது. இதனால் ரசிகர்கள் அப்புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement