• Apr 24 2024

டாடா படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன பிரபுதேவா- என்ன பதிவு போட்டிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரொமாண்டிக் திரைப்படமாக 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியது.ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார். இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.குழந்தையை தனியாக வளர்த்துவரும் தந்தை பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. 


இதனிடையே நடிகரும் இயக்குநரும், கோரியோகிராஃபருமான பிரபு தேவா டாடா படம் பார்த்துவிட்டு அதுகுறித்து நெகிழ்ச்சி ட்வீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.அந்த டுவீட்டில்,"டாடா படம் பார்த்தேன். இயக்குநர் மிக அருமையாக பணியாற்றியிருக்கிறார். 

கதாநாயகன் மற்றும் கதாநாயகி சிறப்பு. அற்புதமான வசனங்கள், மொத்த படக்குழுவும்  எக்ஸெலெண்ட். இந்த படம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement