• Apr 19 2024

பிரபுதேவா, லாரன்ஸ்க்குப் போட்டியாக... கதாநாயகனாக களமிறங்கும் மற்றொரு நடன இயக்குநர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகர்கள் இயக்குநராக மாறுவதும், இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவதும் சகஜமான ஒன்றுதான். இவ்வாறு மாறியவர்கள் பலரும் சினிமாத் துறையில் சாதித்த வரலாறும் உண்டு. அந்த வரிசையில் பிரபுதேவா, லாரன்ஸ், ஹரிகுமார், தினேஷ் ஆகிய நடன இயக்குநர்களைக் குறிப்பிட்டுக் கூற முடியும். 


இந்த வரிசையில் இன்னொரு நடன இயக்குநரும் இணையவுள்ளாராம். அதாவது ஜாய்மதி என்ற நடன இயக்குநர் 'நற்பவி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜாய்மதி குறிப்பாக நூறு படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கின்றார். அதுமட்டுமல்லாது ஒரு சில குறும்படங்களில் நடித்தும், இயக்கியும் அனுபவம் பெற்றவராகவும் இருக்கிறார்.

இவர் நடிக்கவுள்ள 'நற்பவி' படத்தில் ஜாய்மதியுடன் இணைந்து ப்ரீத்தி, மதுமிதா, காவியா, சந்தானபாரதி, சம்பத்ராம், பாலசுப்ரமணியம், முனீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அத்தோடு இந்தப் படத்தை எஸ்.ஜே.திவாகர் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட வகையில் டைரக்டு செய்கிறார். 


அந்தவகையில் விவசாயம் செய்யும் கதாநாயகன் சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறார். அதுமட்டுமல்லாது கிராமத்தின் உடைய வளர்ச்சியிலும் ஈடுபடுகிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் மீது கொலைப் பழி ஒன்று விழுகிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? என்பது தான் இப்படத்தின் உடைய கதை. மேலும் இப்படத்திற்கு திருமூலம் என்பவர் ஒளிப்பதிவினையும், தயாநந்த் பிறைசூடன் என்பவர் இசையினையும் வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement