சல்மான்கானை விட கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் பிரபாஸ்..!

226

தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரபாஸ் ஆவார் இவர் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார் .மேலும் இவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

அத்தோடு இவர் தெலுங்கில் நடித்த மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர் பெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 போன்ற படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இவர் நடிப்பில் ராதே ஷயாம் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் அடிபுருஷ் என்ற படம் தயாரகி வருகிறது.

மேலும் இதில் ‘ஆதி புருஷ்’ படத்திற்கே அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது ‘ஸ்பிரிட்’ படத்திற்கும் 150 கோடி ரூபாய் சம்பளம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் ஹிந்தி நடிகர்களான சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோரை விடவும் பிரபாஸ் அதிக சம்பளம் பெறுகிறார் என பாலிவுட் மீடியாக்கள் பெருமையாக செய்திகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.