• Apr 25 2024

போட்டாச்சு பூஜை.. இணைகிறது யோகிபாபு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி..வைரலாகும் வீடியோ

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இப்போது நகைச்சுவை நடிகராக இருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. மேலும் இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.


மேலும் இவர் பல தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். மேலும் யோகி பாபு, அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் ஹிந்திப் படமான 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார்.


அடுத்து பிரபாஸ் நடித்து வரும் புதிய பான் இந்தியா படம் ஒன்றிலும் யோகி பாபு நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவையை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டமே இருக்கிறார்கள்.


மேலும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ஹிந்தியில் 'ஜவான்', தெலுங்கில் பிரபாஸ்  என நடித்து பான் இந்தியா நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார்.


இந்நிலையில் புதிய தமிழ் படத்திற்காக யோகிபாபு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைகிறது. அப்போது கோவில் ஒன்றில் யோகிபாபு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இத்தோ அந்த வீடியோ...

Advertisement

Advertisement

Advertisement