• Dec 04 2023

ட்ரோன் தாக்கியதில் படுகாயமடைந்த பிரபல தெலுங்கு நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நாக பாபு. இவரின் மூத்த மகன் தான் விஷ்ணு மஞ்சு.இவர் கடந்த வருடம் தெலுங்கு திரையுலக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் மாறினார்.இதனை அடுத்து மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் கண்ணப்பா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் .

இந்தப் படத்தை அவரது தந்தை மோகன்பாபுவே தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது.


நியூசிலாந்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது டிரோன் பயன்படுத்தி கிளோஸப் காட்சிகளை எடுத்து இருக்கின்றனர். அப்போது ஒரு டிரோன் கட்டுப்பாட்டை இழந்து விஷ்ணு மஞ்சு கையில் தாக்கி இருக்கிறது.


இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் விஷ்ணு மஞ்சு. மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓரிரு நாட்கள் அவர் சிகிச்சையும் ஓய்வும் பெற வேண்டி இருக்கிறது என்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement