• Apr 24 2024

AK62 திரைப்படத்தில் பிரபல சீரியல் நடிகை.! யார் தெரியுமா..?தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க...

Jo / 1 year ago

Advertisement

Listen News!

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது 62-வது திரைப்படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார். சமீபத்தில் கூட மிகவும் ஸ்டைலான லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த லுக் தன்னுடைய 62-வது படத்திற்காக தான் அஜித் வைத்துள்ளார் என்று பலரும் கூறினார்கள்.

மேலும், அஜித்தின் 62-வது திரைப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால். இன்னும் படத்தை யார் இயக்க போகிறார் என்ற குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு பக்கம் கிட்டத்தட்ட அஜித்தின் 62-வது திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்கிறார்கள்.

 அந்த வகையில், தற்போது படத்தில் சீரியல் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவர் யார் என்றால், ஜீ தமிழ் மற்றும் சன் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்த சைத்ரா ரெட்டி தான்.

மேலும் நடிகை சைத்ரா ரெட்டி ஏற்கனவே அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement

Advertisement