• Apr 20 2024

ஒல்லி பிரபலத்துடன் ஊர் சுற்றும் பிரபல நடிகை: எச்சரித்த திரையுலகம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநரின் மகள் ஒல்லி இசையமைப்பாளருடன் ஊர் சுற்றுவது பற்றி தான் கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக உள்ளது.

பிரமாண்டத்திற்கு பெயர் போன அந்த இயக்குநரின் மகள் நடிகையாகிவிட்டார். முதல் படத்தில் தம்பி நடிகருக்கு ஜோடியாக நடித்தார்.எனினும்  தற்போது டிவி நடிகருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

அம்மணியை தேடி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது நடிப்பு தவிர்த்து பாடவும் செய்கிறார். இவ்வாறுஇருக்கையில் தான் அவர் ஒல்லி இசையமைப்பாளரை பிடித்திருக்கிறாராம்.

அவருடன் நெருக்கமாக பழகி வருவதுடன், ஊர் சுற்றுகிறாராம். மேலும் இப்படி எல்லாம் செய்து ஒல்லியை கூல் செய்துவிட்டால் அவர் தனக்கு பாட வாய்ப்பு தருவார் என்பது நடிகையின் கணக்காம்.

வாய்ப்புக்காக இந்த அளவுக்கா இறங்குவது என்று கோடம்பாக்கத்தில் பேசுகிறார்கள்.அத்தோடு  ஒல்லி சும்மாவே ஒரு மாதிரியான ஆள். பார்த்து பழகுமா என்று பிரமாண்டத்திற்கு நெருக்கமான சிலர் நடிகையை எச்சரித்தார்களாம்.

ஆனால் யார் பேச்சையும் கேட்கும் மூடில் நடிகை இல்லையாம். இதெல்லாம் எங்கு போய் முடியப் போகுதோ என்கிறார்கள் கோடம்பாக்கத்து காரர்கள்.

எனினும் இதற்கிடையே சக நடிகைகள் வேறு பிரமாண்டத்தின் மகள் மீது கடுப்பில் இருக்கிறார்களாம். பார்க்க துணை நடிகை மாதிரி தான் இருக்கார். இவருக்கு எப்படி பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று அவர்கள் பங்கிறகு பேசுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement