• Apr 20 2024

பிரபல நடிகை பூர்ணா திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்-மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமானவர் நடிகை பூர்ணா.  ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்பெயராக பூர்ணா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை பெரிதும்  ஈர்த்திருந்தார்.


கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற பல  படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற சினிமா படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. எனினும் கடைசியாக நடிகை பூர்ணா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'விசித்திரன்' படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார்.


கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சானித் ஆசிப் அலி எனும் தொழிலதிபரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார்.


திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "சிறப்பு, நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வாழ்க்கைத் துணையின் அனைத்து குணநலன்களையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னைக் குறைவாக உணரவில்லை.


நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க என்னை ஊக்கப்படுத்தினீர். இன்று, நம் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான ஒற்றுமை பயணத்தைத் தொடங்குகிறோம்.


மேலும் இது கொஞ்சம் அதிகம்  என்று எனக்குத் தெரியும்,  இன்ப துன்பத்தில்  உங்களுடன் இருப்பேன் என்றும் எப்போதும் உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளிக்கிறேன். ❤️" என பூர்ணா திருமணம் குறித்து பதிவிட்டுள்ளார்.


மணமகன் சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.அத்தோடு  துபாய் & அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement