• Apr 23 2024

படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து... வாகனம் மோதி பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை பல்லவி ஜோஷி. இவர் கன்னடம், மலையாளம், மராத்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார். 


மேலும் கடந்த வருடம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற 'தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து பலரிடமிருந்தும் பாராட்டு பெற்றார். பல்லவி ஜோஷி 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 


அந்தவகையில் தற்போது 'தி வாக்சின் வார்' என்ற படத்தில் பல்லவி ஜோஷி நடித்து வருகிறார். இப்படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பானது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


இந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகை பல்லவி ஜோஷி காயம் அடைந்துள்ளார். அதாவது முக்கிய காட்சியொன்றை படமாக்கியபோது, வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பல்லவி ஜோஷி மீது மோதியதாகவும், இதில் அவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 


இதையடுத்து நடிகை பல்லவி ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த இவரின் ரசிகர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement