சிக்கலில் மாட்டி தவிக்கும் பூஜா ஹெக்டே : கோபத்தில் ரசிகர்கள் !

158


தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இவர் பல ரசிக பட்டாளத்தையும் தன் வசம் கொண்டுள்ளார். தெலுங்கு, தமிழ், மட்டும் இன்றி இவர் மலையாளம், கன்னடம், என பல மொழியிலும் பொலிவூட்டிலும் நடித்து வருகின்றார்.இவர் மாலைதீவு சென்று வெளியிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வைரவாகி இருந்ததையும் காணமுடியும். இவர் முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகின்றார்.

இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக காணப்படுகின்றார் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இவர் பல புகைப்படத்தையும் வெளியிட்டு வருகின்றார்.இவர் அது மட்டும் இன்றி தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இதனால் லட்சக் கணக்கானவர்கள் இவரை பின்தொடர்கிறார்கள் என்றும் கூறலாம்.

சமீபகாலமான மது நிறுவனங்கள் நடிகர், நடிகைகளை கொண்டு அவர்களது சமூக வலைத்தளங்கள் மூலமாக விளம்பரம் செய்து வருகிறது. இதற்காக அவர்களுக்கு லட்சக் கணக்கில் சம்பளம் கொடுக்கிறது. ஏற்கனவே காஜல் அகர்வால் உள்ளிட்ட சில நடிகைகள் இதுபோன்று விளம்பரப்படுத்தினர். இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் நாம் அறிந்த விடயமாகும்.

இந்த நிலையில் இவர் இப்போது ஒரு பிரபல நிறுவனத்தின் மதுவை பக்காவாக ஒரு கிளாசில் ஊற்றி அதில் ஐஸ், சோடா கலந்து வைத்து விட்டு கவர்ச்சி உடையில் குதூகல ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அது மட்டும் இன்றி இவரின் ரசிகர்கள் இதற்கு எதிராக கண்டனமும் கூறி வருவதாவகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்றும் சிலர் இவருக்கு எதிராக பின்வருமாறு பதிவிட்டுள்ளனர். அதாவது: பணத்துக்காக மது குடிப்பதை ஊக்கப்படுத்தலாமா என தெரிவித்துள்ளனர்.

இதனால் இவர் பெரும் சோகத்தில் இருப்பதாகவும் தன் ரசிகர்களுக்கு இந்த பிரச்சினையை சமாளிக்கும் வகையில் எந்த செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறிப்பிடப்பட்டுள்ளன.