• Jun 04 2023

வசூலில் படுத்த 'பொன்னியின் செல்வன் 2'... 2 நாட்களில் வெறும் இத்தனை கோடி தானா..? இதற்கு PS-1 பரவாய் இல்ல போலவே..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


இதனையடுத்து நேற்று முன் தினம் வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ளது.

அந்தவகையில் இரண்டு நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டு நாட்கள் வசூலில் இரண்டாம் பாகம் வசூலில் சற்று குறைவு தான் என தகவல் தெரிவிக்கின்றன. 


போகப் போக இதன் வசூல் அதிகரிக்கின்றதா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement