• Jan 27 2023

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ஆம் பாகம்- ரிலீஸ் தேதியுடன் வெளியான பெஸ்ட்லுக் போஸ்டர்

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!

மறைந்த எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில்  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாd திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

அதன் முதற்பாகம் வெளியாகி முதல் நாளில் பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.


இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நடுவே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவலை நேற்று லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இன்று இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா இந்த போஸ்டரை டிசைன் செய்துள்ளார். சோழ மக்கள் முன்னிலையில் முடிசூடும் மணிமுடி ஏந்தியபடி இந்த போஸ்டர் அமைந்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement