• Mar 26 2023

“கடன் வாங்கிட்டு தில்லுமுல்லு செய்த பொன்னம்பலம்...”பகீர் கிளப்பிய பிரபலம்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்ஒரு காலகட்டத்தில் வில்லன் நடிகராக ஜொலித்த பொன்னம்பலத்தின் பேட்டிக்கு எதிராக பயில்வான் பல கருத்துக்களை கூறியுள்ளார்.

பல படங்களை நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பொன்னம்பலம்.இவர்  சினிமாவில் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் தான் உழைத்த பணத்தை அபகரிப்பதற்காக தனது சகோதரர் விஷம் வைத்து தன்னை கொல்லப் பார்ப்பதாக பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்தவகையில் தனது மூத்த சகோதரரால் தனது வாழ்வில் நடந்த இன்னல்கள் குறித்து அவர் பேசுகையில் "முத்து என்பவர் 3ஆவது சம்சாரத்துப் பிள்ளை, அவர் சினிமாவில் 40 வருடம் இருந்தார். 40 வருடமாக இருந்தும் ஒரு வீடு வாசல் கட்டல, ஒண்ணும் கட்டல என்ற பொறாமை தான்.

அவர் 3தப்பு பண்ணினாரு. காப்பீட்டுத் திட்டத்தில் எனது மனைவியின் பெயருக்குப் பதிலாக அவரது பெயரை nominee ஆக சேர்த்துக்கிட்டாரு, incomtax ஆபீஸ் இல் என்னுடைய note book கொண்டு போய் கொடுத்தாரு நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதைக் காட்டிறதற்கு, அதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினேன், கணக்குகளை என்னுடைய சகோதரர் தான் பார்த்து வந்ததால் எனக்கு வருமான வரித்துறை குறித்து விளங்கவில்லை, திருமணம் ஆனதால் மனைவியின் பேச்சைக் கேட்கக் கூடாது என மாந்திரீகம் செய்தார்" எனக் கூறினார்.

மேலும் "நான் நடித்த படங்களில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது கூட எனக்குத் தெரியாது, எனது உதவியாளரை மிரட்டி 3முறை விஷம் வைத்துக் கொடுத்தார், அந்த விஷத்தால் தொடர்ந்து 3மாசம் வாந்திபேதி ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாந்திரீகம் செய்த் பொருளுடன் எனது உடைகளை நிலத்தில் புதைத்தார். என்னை வேகமாக கொன்றிருக்கலாம், நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதை அறியவே திட்டம் தீட்டி நடித்தார், எனக்கு சிறுநீராக பிரச்சினை வருவதற்கு முன்பாகவே அவருக்கு சிறுநீராக பிரச்சினை ஏற்பட்டு உயிரிழந்தார், எனது மகனின் பிறந்த நாளில் மதுவில் விஷம் கலந்து கொடுத்தார், ஆனால் அந்த மதுவை எனது நண்பர் குடித்ததால் அவர் உயிரிழந்தார்" எனவும் அந்த பேட்டியில் அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார் பொன்னம்பலம்.இவ்வாறு அடுக்கடுக்காக பல விசயங்களை கூறி இருந்த பொன்னம்பலத்திற்கு எதிராக பல விடயங்களை கூறியுள்ளார் பத்திரைகையாளரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்.அதாவது இவர் கூறுவது அனைத்தும் பொய்.இவர் எனக்கு ஒரு நல்ல தம்பியாக இருந்தாலும் இப்படி கூறியது அனைத்தும் தேவை தானா..அஜித்தை தனது தம்பி மாதிரி பார்த்தேன் என்று கூறினார்.ஆனால் அவர் தனக்கு உதவி செய்ய முனவரவில்லை யாம்.அவர் ஏன் உனக்கு உதவி செய்யனும்.நீ படத்தில் வில்லனாக நடித்தாய் அது மட்டும் தானே.

உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்வது பாராட்டத்தக்கது.ஆனால் உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுப்பது தவறு.இப்படி உதவி செய்ததை மட்டும் கூறியிருந்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் கிடைக்கும்.ஆ.. நடிகர் பொன்னம்பலம் உடல் தேறிவிட்டாரா..? அவருக்கு பட வாய்ப்புகொடுக்கனும் என்று...ஆனால் இப்படி பேசுவதால் படவாய்ப்பு தட்டிப்போவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.அத்தோடு இவர் அதிகம் மது அருந்துபவர்.இவர் கடன் வாங்கிட்டு டுபுக்கு வேலை செய்தவர்.இன்னமும் அந்த புகார் நிலுவையில் உள்ளது.இவ்வாறான வேலைகள் செய்துவிட்டு இப்படிபேசுவது தவறானது.இவரின் அப்பாவிற்கு 4 பொண்டாட்டி என்று இப்ப ஏன் சொல்லுவான்.அவர் ஜிம் போடி 4 பொண்டாட்டி வைத்து இருந்தார்.அப்படியான விசயங்களை வந்து பேட்டி கொடுக்கக்கூடாது.என நிறைய விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
Advertisement

Advertisement

Advertisement