• Apr 23 2024

அரசியல் என்னை விட்டு எப்போதும் விலகாது- சர்ச்சையாகப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னணி நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்துள்ளது என்பது தெரிந்ததே.

இவர் கடந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார்.ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால்  அவர் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார்


இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகி தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் அவர் இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை என்று அவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அவர் விரைவில் ஆந்திர அரசியலில் முழு வீச்சில் தீவிரமாக ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Advertisement

Advertisement

Advertisement