• Mar 28 2024

பிச்சைக்காரன் 2 பொறுமையை ரொம்பவே சோதிக்கும் திரைப்படம்- மோசமாக கழுவி ஊற்றிய பயில்வான் ரங்கநாதன்

stella / 10 months ago

Advertisement

Listen News!

பிச்சைக்காரன் முதல் பாகத்தை எழுதி இயக்கியவர் சசி. இவர் இயல்பான எதார்த்த இயக்குநர் என்பதால், அந்த படத்தில் காதல், சென்டிமென்ட், திருப்பம், பரபரப்பு என எல்லாமே இருந்தது. இதையடுத்து, இரண்டாம் பாகத்தின் கதையை விஜய் ஆண்டனி எழுதி, சசியை இயக்க சொன்னார். ஆனால், சசி இப்படத்தை இயக்க மறுத்துவிட்டதால், விஜய் ஆண்டனி இயக்குநர் ஆனார்.

தாய்,தந்தையை இழந்த விஜய் ஆண்டனி, தனது தங்கை மீது உயிரையே வைத்து இருக்கிறார். இந்த பாசத்தை பார்க்கும் போது, பாசமலர், எங்கள் வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நினைவிற்கு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்கையை ஒரு கும்பல் கடத்திவிடுகிறது அவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை. அதே போல விஜய் ஆண்டனியும் துபாய்க்கு கடத்தப்படுகிறார்.


இப்படியே நாட்கள் செல்ல, இந்தியாவின் டாப் 10 பணக்காரரான விஜய் ஆண்டனியிடம் இருக்கும் பணத்தையும் சொத்தையும் அபகரிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறார்கள். இதற்காக விஜய் ஆண்டனியின் உடலில் வேறொருவரின் மூளையை பொருத்தி அதன் மூலம் சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறார். இதற்காக ஒரே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை தேடும் போது பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி கிடைக்கிறார். இவரது உடலில் பணக்காரரின் மூளை வைக்கப்படுகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி இரட்டைவேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி மியூசிக் நன்றாக போடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இயக்குநர் ஆகுகிறேன் என்று பல இடத்தில் கஷ்டப்பட்டுள்ளார். படத்தின் கதை எதுவுமே இல்லாததால்,படம் பார்ப்பவர்களுக்கு போரடிக்கிறது. ஆனால், வழக்கம் போல விஜய் ஆண்டனியின் இசை ரசிக்க வைக்கிறது.

டான்ஸ் ஆடத்தெரியாததால், இந்த படத்திலும் டூயட் பாடல் இல்லை, இது நல்லவேளை தப்பித்துவிட்டோம் என மனதிற்குள் நினைக்கத் தோன்றுகிறது. விஜய் ஆண்டனி சமீபத்தில் நடித்த படங்கள் இவருக்கு பெயரை கொடுக்கவில்லை. இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தருமா என்பது சந்தேகம் தான். மட்டமான படம் என்று சொல்லிவிடமுடியாது, ஆனால், பொறுமையை சோதிக்கும் படம் ஒருமுறை பார்க்கலாம் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement