பாடசாலை உடையில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் சிம்பு எடுத்த புகைப்படம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்.

242

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் நடிகை த்ரிஷா, இவர் நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.அத்தோடு தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்ததோடு ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தும் வைத்துள்ளார்.

மேலும் த்ரிஷா மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அப்படத்திலிருந்து தற்பொழுது வரை சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வருகின்றார்.இவர் நடிப்பில் கடைசியாக பரமபத விளையாட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியானது, மேலும் தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்நிலையில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அலை, இப்படத்தில் தான் இவர்கள் இருவரும் ஒன்றாக முதலில் நடித்தனர்.அதன் பிறகு இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தனர் என்பதும் தெரிந்ததே.

மேலும் தற்போது அவர்கள் இருவரு ம்அலை படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட பலரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அப் புகைப்படத்தில் இருவரும் பாடசாலை உடை அணிந்திருப்பது போல இருப்பதால் ரசிகர்கள் பலரும் கமண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: