மறைந்த விவேக் மற்றும் அவரது பிள்ளைகள்-வைரலாகும் புகைப்படம்.

22530

தமிழ் சினிமாவே தற்பொழுது மாபெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. அந்த இழப்பு வேற எதுவுமில்லை நடிகரும் சமூக சேவையாளருமான நடிகர் விவேக்கின் மரணம் தான். லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட விவேக் அவர்கள் நேற்று மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.

இவரது இறப்பு திரையுலகத்திற்கே பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இவரது மரண செய்தியை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்தவாறு இருக்கின்றமையும் தற்பொழுது இவரது உடலை விருக்கம்பாக்கம் உள்ள இவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரது உடலை பல திரையுலக நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் சென்று பார்வையிட்டு வருவதோடு விவேக்கின் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு விவேக் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல்அவர் நட்ட மரங்களுக்கும் கடும் சோகத்தை கொடுத்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் நடிகர் விவேக் அவர்கள் வெளியே சிரித்துக்கொண்டு இருந்தாலும் உள்ளே தனது மகனின் இறப்பின் சோகத்தில் தான் வாழ்ந்து வந்துள்ளார் என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.தற்போது விவேக் அவர்களுக்கு அமிர்தா நந்தினி மற்றும் தேஜஸ்வினி என 2 மகள்கள் உள்ளார்களாம்.இவர் குடும்பத்தாருடன் எடுத்த புகைப்படமே தற்பொழுது வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

  1. நடிகர் விவேக் இறப்பிற்கு இதுதான் காரணமாம் கசியும் உண்மைத் தகவல்.
  2. நடிகர் விவேக் நடித்த பிரமாண்டமான இறுதிப்படம் எது தெரியுமா?
  3. மறைந்த நடிகர் விவேக்கின் வேண்டுகோளை நிறைவேற்றுவாரா? நடிகர் அஜித்
  4. தன்னுடைய இறப்பை முதலே அறிந்திருந்த விவேக்- டுவிட்டரில் அவரே பதிவிட்ட பதிவு
  5. நகைச்சுவைத்தாரகை நடிகர் விவேக்கின் உடலிற்கு அஞ்சலி செலித்திவரும் திரைப்பிரபலங்கள்

சமூக ஊடகங்களில்: