• Mar 28 2023

மனைவியின் வீடியோவால் பொங்கி எழுந்த 'பேட்ட' பட வில்லன்.. பதிலடி கொடுத்து வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்தி நடிகரான நவாசுதீன் சித்திக் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த 'பேட்ட' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ஆனால் சமீபகாலமாக இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.


அதாவது அலியா தங்கள் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக நவாசுதீனின் தாயும், நவாசுதீன் தன் குழந்தையை ஏற்க மறுப்பதாக அலியாவும் மாறி மாறி புகார் அளித்து வந்திருந்தனர். இதன் உச்சகட்டமாக நவாசுதீன் தன் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே காக்க வைத்ததாகசிறிது நேரத்திற்கு முன்னதாக அலியா வீடியோ ஒன்றினைப் பகிர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


தன் மீதான அடுக்கடுக்கான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்காமல் அமைதி காத்து வந்த நவாசுதீன் சித்திக் தற்போது மௌனம் கலைந்து பதிலளித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் “என் மௌனத்தால் எல்லா இடங்களிலும் நான் கெட்டவன் என்று அழைக்கப்படுகிறேன். நான் அமைதி காத்ததற்குக் காரணம், இந்த நகைச்சுவைகள் எல்லாம் என் சிறிய குழந்தைகள் படிக்க நேரிடுமே என்று தான் நான் இவ்வளவு காலமாக அமைதி காத்தேன்.

ஆனால் சமூக ஊடக தளங்கள், பத்திரிகைகள், ஒரு சில மக்கள் எனது நடத்தையை பற்றி ரொம்பவே அவதூறாகப் பேசுவதை ரசிக்கிறார்கள். எனவே நான் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நானும் ஆலியாவும் பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து இருக்கவில்லை, நாங்கள் இருவரும் ஏற்கெனவே விவாகரத்து பெற்றுவிட்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே இதுவரை காலமும் எங்களுக்குள் புரிதல் இருந்தது.

அந்தவகையில் என் குழந்தைகள் ஏன் இந்தியாவில் இருக்கிறார்கள், 45 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று யாருக்கும் தெரியாது. பள்ளியிலிருந்து எனக்குக் கடிதம் வந்துள்ளது. எனது குழந்தைகள் கடந்த 45 நாட்களாக பணையக் கைதிகளாக வைக்கப்பட்டு துபாயில் பள்ளிப் படிப்பை இழந்தனர். 


கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை துபாயில் விட்டுவிட்டு பணம் கேட்பதற்காக தற்போது அவர்களை இங்கு அழைத்து வந்துள்ளார். பள்ளிக் கட்டணம், மருத்துவம், பயணம் மற்றும் இதர பொழுதுபோக்குச் செலவுகள் நீங்கலாக, சராசரியாக, கடந்த 2 ஆண்டுளில் மாதத்திற்கு சுமார் 10 லட்சமும், என் குழந்தைகளுடன் துபாய்க்குச் செல்வதற்கு முன்பு மாதத்திற்கு 5-7 லட்சமும் என்னிடம் அலியா பெற்றுக் கொண்டார்.

அவர் எனது குழந்தைகளின் தாய் என்ற ஒரே காரணத்தால் அவரது வருமானத்தை அமைத்துக் கொள்ள உதவுவதற்காக, என் செலவில் அவரது 3 படங்களுக்கு நானே நிதியளித்துள்ளேன். என் குழந்தைகளுக்காக அவருக்கு ஆடம்பர கார்கள் கொடுக்கப்பட்டன, ஆனால் அலியா அவற்றை விற்று பணத்தை தானே செலவழித்தார். 

அதுமட்டுமல்லாது எனது குழந்தைகளுக்காக மும்பையின் வெர்சோவாவில் கடலை நோக்கிய ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கியுள்ளேன். எனது குழந்தைகள் சிறியவர்கள் என்பதால் அலியா அந்த குடியிருப்பின் இணை உரிமையாளராக ஆக்கப்பட்டார். நான் என் குழந்தைகளுக்கு துபாயில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை கொடுத்துள்ளேன், அவரும் வசதியாக வசித்து வந்தார்.

ஆனால் அலியா அதிக பணத்தை மட்டுமே விரும்புகிறார். அதனால் என் மீதும் என் அம்மா மீதும் பல வழக்குகள் போட்டிருக்கிறார். அது அவருடைய வாடிக்கை. கடந்த காலத்திலும் அலியா இதையேதான் செய்து வந்திருக்கின்றார். அவருடைய கோரிக்கையின்படி பணம் கொடுத்தபோது வழக்கை உடனே திரும்பப் பெற்றார்.


மேலும் எனது குழந்தைகள் விடுமுறையில் இந்தியா வரும்போதெல்லாம், அவர்கள் பாட்டியுடன் மட்டுமே தங்குவார்கள். அவர்களை எப்படி வீட்டை விட்டு வெளியே நான் அனுப்ப முடியும். அப்போது நான் வீட்டில் இல்லை. அலியா ஏன் நான் குழந்தைகளை வீட்டை விட்டு அனுப்புவதை வீடியோ எடுக்கவில்லை?

இந்த நாடகத்தில் அலியா என் குழந்தைகளை இழுத்துவிட்டுள்ளார். என்னை மிரட்டி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக, என் தொழிலைக் கெடுத்து, அவருடைய சட்ட விரோதமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இதையெல்லாம் செய்கிறார்” எனத் தெரிவித்துள்ளார் நடிகர் நவாசுதீன் சித்திக்

இந்நிலையில் அலியா குறித்த நவாசுதீனின் இந்த விளக்கம் ஆனது பாலிவுட் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement