• Sep 27 2022

நடிகைகளுக்கு நிகராக இருந்த பெப்சி உமா... தற்போது இந்த வேலையைத்தான் செய்து வருகின்றாராம்...!

Listen News!
Prema / 3 days ago
image
Listen News!

தன்னுடைய பாடசாலைக் காலத்திலேயே தொகுப்பாளினியாக அறிமுகமான ஒருவரே பெப்சி உமா. அதாவது இவர் 12-ஆம் வகுப்பு படிக்கும்போதே தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து விட்டார்.  இவர் முதன்முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'வாங்க பழகலாம்' நிகழ்ச்சி வாயிலாக தனது பயணத்தை தொடங்கினார்.


இந்த நிகழ்ச்சி ஆனது 100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பான நேரத்தில் தான் அவருக்கு 'பெப்சி உங்கள் சாய்ஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு முன் பல்வேறு கண்டிஷன்களை போட்டாராம் உமா. 

அதாவது "என்னுடைய உடை, மேக் அப் மற்றும் தான் பேசக்கூடிய ஸ்டைல் உள்ளிட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடக்கூடாது" என்பதுதானாம். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓகே சொன்னதன் பிற்பாடு தான் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்தாராம் உமா.

இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பான ஒரு சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டது. இதற்கு காரணம் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா அணிந்து வரும் புடவை, அவருடைய ஹேர்ஸ்டைல் மற்றும் அவர் பேசும் விதம் ஆகியவை தான். இவை அனைத்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் பெரிதும் கவர்ந்தது. 

இதன் காரணமாக ஒவ்வொரு வார இறுதியிலும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது டிஆர்பி எகிற ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தில் சினிமா நடிகர், நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருந்தார்களோ அந்த அளவுக்கு பெப்சி உமாவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்ததால், 'பெப்சி உங்கள் சாய்ஸ்' நிகழ்ச்சியை 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்தார் உமா.


இந்நிகழ்ச்சியில் பெப்சி உமா, கவர்ச்சி உடை அணிந்ததே இல்லை அதுமட்டுமின்றி கவர்ச்சியாக பேசியதும் இல்லை. இதன் காரணமாகவே அவரை மக்களுக்கு பெரிதும் பிடித்துப் போனது. அறிமுகமாகி குறுகிய காலத்தில் பெப்சி உமா, மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததால் திரைப்பட இயக்குநர்கள் பலரும் அவரை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்தனர். 

அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய முத்து படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் பெப்சி உமாவை தான் முதலில் அணுகினாராம். ஆனால் அவர் முடியவே முடியாது என மறுத்த பின்னர் தான் அப்படத்தில் மீனாவை நடிக்க வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இதற்கு உமா மறுப்பு தெரிவித்தமைக்கான முக்கிய காரணம், அவருக்கு சினிமாவின் மீதும், நடிப்பின் மீதும் சுத்தமாக ஆர்வம் இல்லையாம். ஆர்வமில்லாத ஒரு வேலையை என்னால் செய்யவே முடியாது, அதனால் தான் நடிக்கவே மாட்டேன் என கூறியிருக்கின்றாராம். 

மேலும் நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய சம்பவம் ஆனது அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் பெப்சி உமாவுக்கு அவரது தீவிர ரசிகர்கள் கோவில் கட்டினார்களாம்.

இதைக்கேள்விப்பட்ட பாமக நிறுவனரும், அரசியல்வாதியுமான ராமதாஸ், பெப்சி உமா அப்படி என்ன செய்துவிட்டார், அவருக்கு கோவில் கட்டினா தமிழ்நாடே அழிஞ்சு போயிடும் எனப் பலவாறாக விமர்சனம் செய்திருந்தார். 

இது தொடர்பாக பெப்சி உமா சொன்ன கருத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதாவது "ராமதாஸ் சொன்னது 100 சதவீதம் சரி, நான் என்ன செஞ்சிட்டேன்னு எனக்கு கோவில் கட்டுறீங்க.

இந்த மாதிரியெல்லாம் செய்யாதீங்க. என்னுடைய செயலை மட்டும் பாராட்டினால் போதும். என் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்" என தன்னடக்கத்தோடு பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினாராம்.


இவ்வாறாக பல வழிகளிலும் பேமஸாக இருந்த பெப்சி உமா, ஒரு கட்டத்தில் மீடியாவை விட்டே ஒதுங்கி விட்டார். அதன்பின் அவர் என்ன செய்கிறார் என்கிற தகவல் கூட வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது அவர் தனது கணவரின் பிசினஸை கவனித்துக்கொண்டு குடும்பத்தினருடன் சந்தோஷமாக வசித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. 

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%