• Apr 19 2024

டார்ச்சர் செய்த நபர்கள்.. உடனே வீடியோ வெளியிட்ட நடிகை நீலிமா ராணி...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகியவற்றில் நடித்து பிரபல்யமானவர் தான் நீலிமா ராணி.இவர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'தேவர் மகன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தம், நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், போன்ற படங்களில் முக்கிய குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா இசைக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்காக சீரியலை விட்டு விலகிய இவர் தற்போது தன்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். 


இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி, தனக்கு ஆபாசமாகவும் கேவலமாகவும் இத்தனை பேர் டார்ச்சர் செய்ததாகவும் அவர்களை பிளாக் செய்துள்ளதை வீடியோவாக ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.

இத்தனை பேர்களா என்று நெட்டிசன்கள் பலர் ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement