• Apr 01 2023

மகேஷ் பாபுவின் அண்ணனை பிளான் பண்ணி திருமணம் செய்த பவித்ரா.. எல்லாம் அந்த ஒன்றுக்காக தானா..? பரபரப்புத் தகவலை வெளியிட்ட முதல் கணவர்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தெலுங்குத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விடயம் என்றால் அது நரேஷ்-பவித்ரா லோகேஷ் திருமணம் தான். அந்தவகையில் பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும் நடிகை பவித்ரா லோகேஷும் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 


திருமணத்தைத் தொடர்ந்து தற்போது இத்தம்பதியினர் துபாய்க்கு தேனிலவு சென்று உள்ளனர். இதனையடுத்து பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் தற்போது பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 


அந்தவகையில் அவர் கூறுகையில் "பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார், அந்த வாழ்க்கைக்காக அவர் எதையும் செய்வார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. நரேஷின் விஷயத்தில் வித்தியாசமான பிளான் போட்டு உள்ளார்" எனக் கூறியுள்ளார். 


அதுமட்டுமல்லாது "அவரின் ரூ.1500 கோடி சொத்தை அபகரிப்பதற்காக நரேசுடன் திருமண நாடக்ம் தொடங்கியுள்ளார். பணத்துக்காக என்னை விவாகரத்து செய்தார் பவித்ரா லோகேஷ். நரேஷ்க்கு இது இன்னும் புரியவில்லை. என்றாவது ஒரு நாள் கட்டாயம் தெரிந்து கொள்வார்" எனவும் கூறினார். 

மேலும் பவித்ரா லோகேஷை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள நரேஷ் தனது 3-ஆவது மனைவியான ரம்யா ரகுபதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் ரம்யா விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement