• May 29 2023

மறுவீட்டிற்கு அழைத்த தாய், தந்தை.. மறுப்புத் தெரிவித்த பார்த்திபன்.. கண்ணீர் விட்டு அழும் காவியா... 'ஈரமான ரோஜாவே 2'.. இனி நடக்கப்போவது என்ன..?

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 

அதில் காவியாவையும், பார்த்திபனையும் மறுவீட்டிற்கு அழைப்பதற்காக தாய், தந்தை சந்திருக்கின்றனர். ஆனால் பார்த்திபனோ தன்னால் வர முடியாது என முதலில் மறுப்புத் தெரிவிக்கின்றார்.


இதனைக் கேட்டதும் கண்ணீர் விட்டு அழுத காவியா "நாங்க சந்தோசமாகவும், அந்நியோன்னியமாகவும் வாழ்ந்திட்டு இருப்பதாக அவங்க நினச்சிட்டு இருக்காங்க, நம்ம பிரச்சினையை அவங்க கிட்ட சொல்லி அவங்களுக்கு வேதனையை கொடுக்க வேணாம்" எனக் கூறுகின்றார்.

அதற்கு பார்த்திபனும் சரி எனக் கூறி பின்னர் சம்மதிக்கின்றார். இவ்வாறாக இந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. இதனையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement