• May 29 2023

இந்தியில் 'ரீமேக்' ஆகும் 'பரியேறும் பெருமாள் 'திரைப்படம் - ஹீரோ,ஹீரோயின் யார் தெரியுமா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஹிந்தியில் ரிமேக்காக உள்ளது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய அங்குள்ள இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வீரம், கைதி, ராட்சசன், மாநகரம், காஞ்சனா உள்ளிட்ட பல படங்கள் இந்திக்கு சென்றுள்ளன.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் ஜோடியாக நடித்து 2018-ல் திரைக்கு வந்த பரியேறும் பெருமாள் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

பரியேறும் பெருமாள் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி தயாரிப்பாளரும் டைரக்டருமான கரண் ஜோகர் கைப்பற்றியுள்ளதாக  கூறப்படுகிறது.

கதிர் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் சதுர்வேதியும் கயல் ஆனந்தி நடித்திருந்தார் கதாபாத்திரத்தில் திருப்தி திம்ரியும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காதலை மையமாக வைத்து சாதிய பாகுபாடுகளை பேசும் படமாக பரியேறும் பெருமாள் தயாராகி இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement