• Oct 16 2024

புதிய சீரியலில் கதாநாயகியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சாய் காயத்திரி- அதுவும் எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது எல்லா சேனல்களும் போட்டி போட்டுகொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். சன் டிவி மற்றும் ஜீ தமிழ் இரவு 9 மணி ஸ்லாட்டில் புது சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டன, 

மேலும் ஒரு மொழியில் ஹிட்டான சீரியல்கள்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் ரீமேக் செய்து ஒளிபரப்பாகுவதும் வழமையே.மேலும் விஜய் டிவியில் பல சீரியல்கள் டிஆர்பியில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதால் பல புதிய சீரியல்கள் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகின்றன.


அந்த வகையில் அண்மையில் கிழக்கு வாசல் என்னும் சீரியல் ஆரம்பமாகியது இதனை அடுத்து புதிய சீரியல் ஒன்று ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது தெலுங்கில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் Nuvvu Nenu Prema என்ற சீரியலை ரீமேக் செய்துள்ளனர்.

 அந்த சீரியலுக்கு "நீ நான் காதல்" என பெயரிட்டு இருக்கின்றனர். காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சுவாமிநாதன் தான் தெலுங்கு Nuvvu Nenu Premaவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் தமிழ் ரீமேக்கில் வேறு ஒரு நடிகர் தான் ஹரோவாக நடிக்கப்போகிறாராம்.  


தாய் கிரேஷன்ஸ் தயாரிக்கும் இந்த சீரியலில் ஹீரோயினாக வர்ஷினி நடிக்க போகிறார். அதே போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த சாய் காயத்திரியும் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.இதனால் எல்லோரும் தமது வாழ்த்துக்களை இந்த சீரியலுக்கு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement