• Apr 20 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகருக்கு திருமணம்.. மனைவி இந்த பிரபலம் தானா? வைரலாகும் புகைப்படங்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதியதாக அறிமுகமான நடிகர் மகேஷுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது.சீரியல் நடிகர் மகேஷ் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது பிரசாந்த் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.அது மட்டுமல்லாமல் முத்தழகு சீரியலிலும் கதாநாயகனின் தம்பியாக அமுதன் கேரக்டரில் இவர் நடித்து வருகிறார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவருடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிந்திருந்த நிலையில் இன்று இவருடைய திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

விஜய் டிவியில் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து விடுகின்றனர். அத்தோடு கிட்டத்தட்ட இந்த சீரியல் நான்கரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் அதிகமான நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என்கிற மாதிரி மாறிக்கொண்டே இருக்கின்றனர்.அந்த மாதிரி தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரசாந்த் என்கிற கேரக்டரும் அமைந்திருக்கிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் மூன்று நடிகர்கள் மாறி இருக்கின்றனர். அதில் கடைசியாக இப்போது மல்லியின் மகனாக பிரசாந்த் கேரக்டரில் நடிகர் மகேஷ் நடித்து வருகிறார்.


பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகர் மகேஷ் நடிக்க ஆரம்பித்த பிறகு பல்வேறு திருப்பங்கள் நடைபெற்றது. மீனாவின் தங்கையோடு பிரசாந்திற்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. இதில் பல பிரச்சனைகள் நடைபெற்றது. மேலும் இதைத் தொடர்ந்து திருமணம் இனி எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எங்கேஜ்மென்டிலே பெரும் பிரச்சனை நடந்த நிலையில் திருமணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கலந்து கொள்ளுமா? இல்லையா? என்பது ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்றாக இருந்து வரும் நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பத்துக்குள்ளேயே கதை நகர்ந்து வருகிறது. அதனால் மீனாவின் குடும்பம் அதிகமாக காட்டப்படவில்லை.


இவ்வாறுஇருக்கையில்  சீரியல் நடிகர் மகேஷ் நடிக்கும் முத்தழகு சீரியலிலும் அவருக்கு இப்போது தான் திருமணம் முடிந்தது. அதேபோல தற்போது அவருடைய நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு எளிமையாக திருமணம் இன்று நடைபெற்றிருக்கிறது. அவருக்கு சென்னையில் இவிஎஸ் மஹாலில் வைத்து தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவருடைய மனைவியின் பெயர் பிரேமலதா ஆனால் இவர் மீடியா துறையை சார்ந்தவர் இல்லையாம்ய இவர் B.Tech படித்திருக்கிறாராம். எனினும் தற்போது இவருடைய திருமணத்திற்கு முத்தழகு சீரியல் குழுவினர் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கின்றனர். சீரியலின் கதாநாயகன் கதாநாயகி உட்பட பலரும் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.


பாண்டியன் ஸ்டோர் சீரியல் அணியில் இருந்து யாரும் திருமணத்தில் கலந்து கொண்டதாக இதுவரைக்கும் எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் திருமண நேரத்திலும் நடிகர் மகேஷ் ஃபோனின் சேட் செய்த புகைப்படத்தை பார்த்து மணமகள் என்ன நடந்துட்டு இருக்கு, இவர் யாருக்கு சேட் பண்ணிக்கிட்டு இருக்கிறார் என்கிற மாதிரி பார்ப்பது போன்று சில புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்தோடு இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து இதற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement