பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடியப் போகின்றதாம்- இன்ஸ்டாகிராமில் இச் சீரியல் மீனாவின் பதிவு

333

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும்.இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன செம சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

மேலும் சகோதர உறவு ,காதல் என்பவற்றை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பப்படுவதால் இந்தச் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. மேலும் குடும்ப பாங்கான இந்த கதை மக்களின் பெரிய ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடுகிறது. தற்பொழுது கூட தனம் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தின் வளைகாப்பு நிகழ்வை இச் சீரியலில் நடத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு அனைத்து சீரியல் நட்சத்திரங்களும் வந்திருந்ததும் தெரிந்ததே. இதற்கு இடையில் சமூக வலைதளங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா திருமணத்துடன் முடிவுக்கு வருகிறது என பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஒரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா வேடத்தில் நடிக்கும் ஹேமாவிடம் சீரியல் முடிவடைகிறதா என இன்ஸ்டாவில் கேட்டுள்ளார்.அதற்கு அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு இதுவரை எதுவும் கூறவில்லை, எனவே இல்லை என பதில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .