அஜித்துக்கு தங்கையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. யாருடைய இயக்கத்தில் தெரியுமா..!

225

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது. இவருக்கென்று எராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் கொரோனா வைரஸ் குறைந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் திரைவாழ்க்கையில் பல திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டாகி, திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அப்படி அஜித்துக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்த திரைப்படம் வாலி. எஸ்.ஜே. சூர்யா இயக்கிய இப்படத்தில் அஜித் ஹீரோ வில்லன் என இரு வேடங்களில் நடித்திருந்த அனைவருக்கும் தெரிந்த விடயமே.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக நடிகை சுஜிதா நடித்திருந்தார். மேலும் அப்போது சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சுஜிதா, தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாகியுள்ளார்.

மேலும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் எனும் கதாபாத்திரத்தில் சுஜிதா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: