மனைவியுடன் ரொமாண்டிக்காக ஃபோட்டோஷூட் நடத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜுவா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.இதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன்.

சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இன்று சீரியல்நடிகராக ரசிகர்கள் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். இவரது மனைவி அஜந்தா, ஃபோட்டோகிராபராக இருக்கிறார்.

வெங்கட் – அஜந்தா தம்பதிக்கு தேஜு என்ற மகள் இருக்கிறார். தாங்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் படங்களை தவறாமல் இன்ஸ்டகிராமில் பதிவிடுவார் அஜந்தா.

இந்நிலையில் தற்போது இருவரும் ரொமாண்டிக்காக ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். பச்சை நிறத்தில் வெங்கட் வேஷ்டி – சட்டை அணிந்திருக்க, பச்சை-பர்பிள் நிறத்தில் தாவணி பாவடை அணிந்திருக்கிறார் அஜந்தா.

அந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவற்றிற்கு தங்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்