• Sep 21 2023

அந்த ஒரு காரணத்திற்காக இங்கிலீஷ் கிளாஸை விட்ட பாக்கியா... ஆறுதல் சொல்லும் பழனிச்சாமி... Baakiyalakshmi promo..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞசம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


அதில் பாக்கியா தான் ரொம்பவும் ஆசைப்பட்டு சேர்ந்த இங்கிலீஷ் கிளாஸை விடப் போவதாக கூறுகின்றார். அதாவது காலேஜ்ஜையும், இங்கிலிஷ் கிளாஸையும் பார்த்துக் கொள்வதால் தன்னால் வீட்டைக் கவனமாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என மாமனாரிடம் கூறுகின்றார்.


பின்னர் இங்கிலீஷ் கிளாஸிற்கு சென்று தான் இனிமேல் வரமாட்டேன் என்பதனை பாக்கியா அவர்களிடம் கூறுகின்றார். அங்கிருந்தவர்களும் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகின்றனர். பின்னர் பாக்கியா கண் கலங்கி அழுகின்றார். இதனைப் பார்த்த பழனிச்சாமி "என்ன நீங்க இதுக்கெல்லாம் போய்ட்டு அழுறீங்க, ஒரு பெரிய விஷயம் நடக்கணும் என்றால் இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களை நாம விட்டுக் கொடுத்துதான் ஆகணும்" என்கிறார்.


பதிலுக்கு பாக்கியா "இன்னும் நான் இங்க கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு" என்கிறார். அதற்கு பழனிச்சாமியும் அவருக்கு  ஆறுதல் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement