Saturday, May 28, 2022

பாக்கியாவை டிவோர்ஸ் செய்யும்மாறு கோபியை வற்புறுத்தும் ராதிகா-விறுவிறுப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல்

பிரபல விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பல இல்லத்தரிசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டு சூப்பர் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடந்துள்ளது என்று பார்ப்போம்.

கோபியின் அம்மா தனது கணவரிடம் ,கோபி சாப்பிடாமல் போனது பற்றி கூறி வருத்தப்படுகிறார் . அப்போ அவர் அதெல்லாம் அவன் வெளியே நல்லா வக்கனையா சாப்பிட்டு விட்டுத்தான் போவான் என கூறுகிறார். இந்த நேரத்தில் பாக்கியா கையில் போட்டோவுடன் கீழே இறங்கி வருகிறார்.ஈஸ்வரி எங்க போயிருந்த இவ்வளவு நேரமா என கேட்க மேல இருந்தேன் என கூறுகிறார்.

பின்பு இந்தாங்க மாமா, நீங்க கேட்ட போட்டோஸ் கிடைச்சுடுச்சு என கொடுக்கிறார் பாக்யா. எங்கம்மா இருந்தது என கேட்க அவருடைய ரூம்லதான் பீரோ மேல இருந்தது . அவருடைய நடவடிக்கை இப்போ சரி இல்ல மாமா நான் போட்டோ எங்கே என்று கேட்டதற்கு எங்கவச்சனு தெரியலைன்னு சொன்னாரு. ஆனா ரூம்ல போய் போட்டோ இருக்கான்னு மேல ஏறி பார்க்கிறார். நான் உள்ள போனதும் எல்லாத்தையும் மறைத்து வைத்து விட்டு கீழே இறங்கி விட்டார். ‌‌ போட்டோ விஷயத்துல எதுக்கு மாமா அவர் அப்படி பண்ணனும் என பாக்கியா கேட்கிறார்.

அதற்கு கோபியின் அப்பா ராதிகா, மயூ வீட்டுக்கு வந்தா மாட்டிடுவான்னு பிராடு பையன் போட்டோவை மறைச்சு வச்சு இருக்கான் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார் பிறகு கோபி பற்றி பாக்யா சொல்வதைக் கேட்டு அவரைத் திட்டி விட்டு உள்ளே சென்று விடுகிறார் ஈஸ்வரி. அவன் என்னைக்கு சரியான நடந்திருக்கான்? விடு இந்த வயசுல சில ஆம்பளைங்க இப்படித்தான் கிறுக்குப் பிடித்து அலைவானுங்க என கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து கோபியும் ராதிகாவும் காரில் வெளியே சென்றிருந்த போது மயூ திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறுகிறார் ராதிகா. இதைக் கேட்ட கோபி, அப்படியா மயூவுக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா என கேட்கிறார் இருந்தாலும் அம்மா ரிலேட்டிவ் முன்னாடி அப்படி சொன்னது எனக்கு ஷாக்கா இருந்தது கோபி என்று சொல்கிறார்.

சீக்கிரம் டிவர்ஸ் வாங்குங்க கோபி பிடிக்காத லைஃபை எதுக்கு இழுத்துட்டு இருக்கணும் என கூறுகிறார் ராதிகா. அதெல்லாம் பெரிய பிராசஸ் இல்லை என கோபி சொல்ல என்ன ஒரு வருஷம் ஆகும் என ராதிகா கூறுகிறார். பிறகு கோபி தன்னுடைய நண்பரை சந்தித்து ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் . எனக்கு என் அம்மாவும் இனியாவும் மட்டும் கூட வந்து விட்டால் போதும். அவங்க இல்லாம என்னால இருக்க முடியாது என சொல்கிறார்.

இதெல்லாம் சரியாக படவில்லை என அவருடைய நண்பர் சொல்ல உனக்கு சரியா படனும்னு என்ன இருக்கு? என்னோட முடிவு இதுதான் என கூறுகிறார். பின்பு வீட்டுக்கு வந்த கோபி இனியா, எழில், ஈஸ்வரி, பாக்கியா ஆகியோர் இருக்கும் போது அப்பா ஒருவேளை வேலை விஷயமா வேற ஊருக்கு போய் தங்கி டா நீ என்னடா பண்ணுவ என கேட்க ஈஸ்வரி அப்படி ஏதாவது திட்டம் இருக்கா என்ன அதெல்லாம் வேண்டாம் என கூறுகின்றனர். கோபி இல்ல சும்மா கேட்கிறேன் என சொன்ன இனியா என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது டாடி, நீங்க எங்க போனாலும் நான் உங்களோடவே வந்துவிடுவேன் என்று கூறுகிறார். அதற்கு எழில் லட்டு அப்போ நாங்க எல்லாம் வேண்டாமா என கேட்க நான் வீக்லி ஒரு முறை வந்து உங்களை பார்க்கிறேன் என சொல்கிறார்.

என்ன பாக்காம நீ இருப்பியா என பாக்யா கேட்க அதெல்லாம் இருப்பேன் டாடிய பார்க்காமல் தான் இருக்க மாட்டேன் என சொல்கிறார். பசிக்குதுன்னு என்கிட்ட வருவல அப்போ வச்சிக்கிறேன் என பாக்கியா திட்டி விட்டு உள்ளே செல்கிறார். எந்த முடிவாக இருந்தாலும் உன்னை யோசிச்சுத்தான் எடுப்பேன் என கோபி மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்