• Mar 28 2024

ரிசப்ஷனில் மயூவைப் பார்த்த பாக்கியா- மண்டபத்தை தேடி அலையும் கோபியின் அப்பா- பரபரப்பான எபிஷோட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமிஇ அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 சமையலறையில் பாக்கியா அவரது குழுவுடன் பிஸியாக இருக்க ஒரு பக்கம் ராதிகா மற்றும் கோபி ரிசப்ஷனுக்கு தயாராகின்றனர்.பிறகு எல்லோரும் கீழே வந்து நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களுக்கு ஜூஸ் கொடுக்கின்றனர். ராதிகாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பாக்யாவை பார்ப்பார்கள் என்ற விறுவிறுப்போடு கதை நகர்கிறது அதே போல் பாக்கியா ராதிகா குடும்பத்தை பார்ப்பார் என கதை நகர்கிறது.


ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவரவர் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். பிறகு ரிசப்ஷன் தொடங்குகிறது கோபி மற்றும் ராதிகா மேடைக்கு வர அனைவரும் கிப்ட் கொடுத்து வாழ்த்து கூறுகின்றனர்.


மறுபக்கம் கோபியின் அப்பா மண்டபத்தை தேடி ஆட்டோவில் அலைந்து கொண்டிருக்க இந்த பக்கம் மயூ தொண்டை வலிக்குது ஹாட் வாட்டர் வேண்டும் என பாட்டியிடம் கேட்க மேல கிச்சன்ல போய் வாங்கிக்க என சொல்ல மேலே போகும் மயூ யாராவது இருக்கீங்களா என கேட்க பாக்கியா குரல் கொடுக்க பிறகு பாக்கியாவை பார்த்து மயூ ஆன்ட்டி நீங்களா என்ன சொல்ல அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement