• Apr 25 2024

தங்கலான்' படத்தில் இருந்து அதிரடியாக பிரபல நடிகையை வெளியேற்றிய பா.ரஞ்சித்-வெளியான அதிர்ச்சி தகவல்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடித்து வருகின்றார்.

கே ஜி எஃப் படத்தை போன்று... தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம், இதுவரை எந்த படத்திலும்... நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.


மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி பலர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன், இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற போல் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்றும், இதனால் இந்த படத்தில் இருந்து இவரை நீக்க பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

ஆனால் இப்படி வெளியாகும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. வழக்கம்போல் இது வதந்தியா?  அல்லது உண்மையிலேயே பா ரஞ்சித் படத்தில் இருந்து மாளவிகா மோகனன் நீக்கப்பட உள்ளாரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement