• Apr 25 2024

எங்கள் லிட்டில் அதிசயம் ஆன் தி வே -மனைவி கர்ப்பமாக இருப்பதை லிப்லாக் கொடுத்து அறிவித்த வேம்புலி

stella / 1 year ago

Advertisement

Listen News!

கேஜிஎஃப், பாகுபலி, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து பிரபல்யமானவர் தான்  ஜான் கோக்கேன்.மும்பையை பூர்விகமாக கொண்ட ஜான் கோக்கேன் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் தான் எனலாம். இப்படத்தில் வேம்புலி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.


 குத்துச்சண்டை வீரராக மிரட்டிய இவரது  நடிப்பை பலரும் பாராட்டி தள்ளினர்.மேலும் தற்பொழுது அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இவர் பிரபல நடிகையான மீரா வாசுதேவனை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான பூஜா ராமச்சந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பூஜா ராமச்சந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகை பூஜா ராமச்சந்திரனும் ஜான் கோக்கேனும் லிப்லாக் கொடுத்துக் கொள்ளும் போட்டோவை ஷேர் செய்து குட் நியூஸ் கூறியுள்ளனர். பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக உள்ளார். இதனை இருவருமே தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

 அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது, ஒரு காதல் கதையின் சூறாவளி, அழியாத ஆத்மாக்கள், இதயம் நிறைந்த சிரிப்புகள், பைத்தியக்காரத்தனமான சண்டைகள், முடிவில்லாத உரையாடல்கள், காமம், காதல் மற்றும் சாகசங்கள், ஓ என்ன ஒரு சவாரி செய்தோம், இப்போது எங்கள் லிட்டில் அதிசயம் ஆன் தி வே என்று சொல்ல ஆவலாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement