• Mar 27 2023

நம்ம லெஜண்ட் அண்ணாச்சி வந்துட்டாரு.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

சரவணன் அருள் ஒரு பிரபலமான தொழிலதிபர் மற்றும் லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் ஆவார். கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அவர், கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த “தி லெஜண்ட்” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.

‘தி லெஜண்ட்’ படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் தேவையான வசூலை ஈட்டியது. மேலும், இப்படத்தின் OTT ரிலீஸுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.

இப்போது, ​​படம் ஒரு முன்னணி OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ‘தி லெஜண்ட்’ இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியானது.

இந்த அறிவியல் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படத்தை ஜேடி அண்ட் ஜெர்ரி இயக்கத்தில், சரவணன் அருள், ஊர்வசி ரவுத்தேலா, சுமன், கீதிகா, பிரபு, விவேக், யோகி பாபு, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement