• Mar 29 2024

எங்கட தொழில் உடம்பைக் காட்டி பிழைக்கிறதாக இருக்குது- சீட்டுப் போட்டு பார்த்த நம்பியார்- எதனால் தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாகவே நடித்து தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைப்பிடித்து வந்தவர் நடிகர் நம்பியார். சினிமாவிலேயே நல்ல ஒரு ஆன்மீகவாதியாகவும் ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் வலம் வந்தார் நம்பியார். 60 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் நடித்து வந்த நம்பியார் சிறந்த ஐயப்பன் பக்தனும் ஆவார். அது மட்டுமல்லாமல் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகிய இருவருக்குமே நிரந்தர வில்லனாகவே படங்களில் இடம்பெற்று வந்தார் நம்பியார்.


மேலும் எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தார் வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தார் நம்பியார். அந்த காலத்தில் இருந்த நம்பியாரை 80களுக்கு அப்புறம் சிறந்த குணசித்திர நடிகராக மாற்றியவர் பாக்கியராஜ். பாக்யராஜ் நடித்த தூறல் நின்னு போச்சு என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ரஜினிகாந்தின் பெரும்பாலான படங்களில் நம்பியார் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்த நம்பியார் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்து தன்னுடைய புகழை இன்று வரை பரப்பி இருக்கிறார். இப்பொழுது சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு சாமி தரிசனம் சென்று வருகின்றனர். அதை முதன் முதலில் தொடங்கியவர் நம்பியார் மட்டுமே. ஒரு குருசாமியாக இருந்து அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருந்தார் நம்பியார்.


இந்த நிலையில் அவருடைய ஒரு பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவரிடம் ஒரு நடிகர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு போகும் யாரும் தாடி எடுக்கக் கூடாது எனவும் செருப்பு அணிய கூடாது எனவும் சொல்கிறார்களே அது உண்மையா என கேட்கிறார்.அதற்கு நம்பியார் “முதலில் நானும் யோசித்தேன் ஏனெனில் சினிமாவில் இருக்கும் நாம் எப்படி அந்த மாதிரி இருக்க முடியும் என யோசித்தேன். சில சமயங்களில் படப்பிடிப்பு இருக்கும் வேளையில் தாடி எடுக்க வேண்டி வரும். 

அந்த நேரத்தில் என்ன செய்வது என்றெல்லாம் யோசித்தேன். 1942 ஆம் ஆண்டிலிருந்து நான் மாலை போட்டு போகிறேன். அங்கே போனதும் சாமி முன்னாடி எங்க தொழில் உடம்பை காட்டி பொழைக்கிற தொழிலாக இருக்கிறது தாடி எடுத்து வரலாமா இல்லை தாடியுடன் தான் வர வேண்டுமா என்று போட்டு பார்த்தோம் .அதில் தாடி எடுத்துவிட்டு வரலாம் என விழுந்தது. அதிலிருந்து ஷூட்டிங் இருக்கிற சமயத்தில் தாடி இல்லாமலும் மற்ற நேரங்களில் தாடியுடனும் செல்வேன் “என்று கூறினார்.





Advertisement

Advertisement

Advertisement